Friday, June 15, 2007

வசந்தகாலம்

நம் பள்ளிக்கால நினைவுகள் என்றுமே சுகமானவை. நான் ஒன்னும் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஐந்தாம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு என அனைத்துத் தேர்வுகளிலும் தோல்வி அடைந்து இறுதித்தேர்வில் மட்டும் கஷ்டப்பட்டு கரையேறும் கதை தான். நான் தோல்வி பெற முக்கியக் காரணம் இந்தி. அப்போ நான் மத்த பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் அவ்வப்போது எடுத்தாலும் இந்தியில் மட்டும் 10 அல்லது 15 க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்ததில்லை. நமக்கு என்னவோ அப்போ இந்தி(டீச்சர்) மேல அவ்வளவு கடுப்பு. எப்போ பார்த்தாலும் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க. நாம என்ன பண்றது, அடிப்படை ஆனா, ஆவன்னாவே நமக்கு வராது ஆனா அவுங்க ஒரு வாக்கியம் தப்பில்லாம எழுத சொல்றாங்க. ஒரு வார்த்தை நான் முயற்சி பண்ணினாலே அதுல நாலு தப்பு வரும். அவுங்க அடிக்கிறதும், வகுப்பை விட்டு வெளியே அனுப்புறதும், முட்டி போட வைக்கிறதும்னு அவுங்களும் என்னென்னவோ செஞ்சி பாத்தாங்க ஆனா அவுங்களால என்ன ஒரு வாக்கியம் கூட எழுத வைக்க முடியல. அப்பவே தமிழ் மேல அவ்வளவு பற்று!!! நல்லவேளை ஐந்தாம் வகுப்பில் இந்தி கிடையாது பிரச்சனை இல்லாமல் வருடம் போனது. ஐந்தாம் வகுப்பில் தான் நான் எந்தத் தேர்விலும் தோல்வியைத் தழுவாமல் வருடத்தை முடித்தேன்.

என்னோட அம்மாவுக்கு அப்போ ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு. அவ்வப்போது பள்ளிக்கு வந்து வீட்டில் நாம் செய்யும் வீரப்பிராதபங்களைப் பற்றி என்னோட ஆசிரியைகளிடம் போட்டுக் கொடுப்பது. ஆனால் என்னோட ஆசிரியை சொல்ற பதிலைக் கேட்டு என்னோட அம்மா அதிகமா ஆச்சிரியப்படுவாங்க, சார்லஸா அவன் இருக்குற இடமே தெரியாதே, ரொம்ப அமைதியான பையனாச்சேனு பதில் வரும் என்னோட ஆசிரியையிடமிருந்து, ஆனா நான் வீட்டில் பண்ணுகிற அட்டுழியம் அதிகம், எனக்கு கோபம் அதிகமாக வரும், அப்போது கையில் கிடைக்கும் அனைத்தும் உடையும். தெருவில் சண்டைப்போடுவது, ஒழுங்காகப் படிப்பது கிடையாது என எல்லா அட்டுழியங்களும் நடந்தன. எனக்குப் பல விஷயங்கள் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் எப்போதும் என் மனதில் நிலைத்து இருக்கும். அது என்னுடைய ரிப்போட் கார்டில் நான் கையெழுத்துப் போட்டது!!!

3 comments:

Dominics said...

well done
Keep on going

மழைக்காலங்கள் said...

உன்னோட பள்ளி வாழ்கை பற்றி படித்தபோது நான் செய்த குறும்புகள் ஞாபகம் வருகிறது.

anandchelliah said...

வணக்கம் சார்லஸ். தற்செயலாக உங்கள் வலைத்தளத்தை வந்தடைந்தேன். சிஸ்டர் பிரிட்ஜெட் என்ற பதிவைப் படித்தேன். ஒரு சிறுகதை போல என்னை ஈர்த்தது. நெகிழ்ச்சியாக இருந்தது. முகம் தெரியாத அந்த சிஸ்டரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. இவரைப் போன்ற துறவிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. தொடர்ந்து எழுதுங்கள்...ஆனந்த் செல்லையா, சென்னை