Friday, June 15, 2007

திருட்டுக் கையெழுத்து

அப்போ நான் மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். நான் தான் சொன்னேனே நமக்கு படிப்பு சரியா வராதுன்னு, மேலும் என்னோட அப்பா நான் ஒரு வயசுக் குழந்தையா இருக்கும் போதே இறந்துட்டதுனால நம்மக் குடும்பத்துல எல்லோருக்கும் நம்ம மேல தனிப்பாசம். யாரும் என்னைத் திட்ட மாட்டாங்க. ஆனா ஒருத்தரத் தவிர, அவரு என்னோட கடைசி மாமா, என்னைச் சின்ன வயசுல சும்மா வெளுத்து வாங்குவார். அடி சும்மா உங்க வீட்டு அடி, எங்க வீட்டு அடி இல்ல சும்மா பிரிச்சி மேய்ஞ்சுடுவார். நான் சரியா படிக்கிறது இல்ல அப்படீன்னு எங்க அம்மா அவர் கிட்ட சொல்லிட்டாங்க, அவரும் என்னை பயங்கரமா மிரட்டி வச்சிருந்தார். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் அவர்கிட்ட ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கனும். இரண்டு மூன்று தேர்வுகள் பரவாயில்லாமல் சென்றன. அது இரண்டாவது இடைத்தேர்வு என்று நினைக்கிறேன். பரிட்சையில் மதிப்பெண் சரியில்லை அதாவது ஃபெயில், இரவு அம்மவிடம் ரிப்போர்ட் கார்டைக் காட்டினேன். அம்மாவிடம் பயங்கரத் திட்டு, அடி மட்டும் விழவில்லை. அம்மா கையெழுத்து போட மறுத்துவிட்டார்கள். காலை மாமாவிடம் வாங்கச்சொல்லி உத்தரவு. காலை எழுந்து, பள்ளிக்கு கிளம்பினேன், பள்ளிக்குச் செல்லும் வழியில் தான் மாமாவின் வீடு, என்ன செய்வது என்று புரியவில்லை, மாமாவின் அடியை நினைத்தாலே பயம், மாமாவிடம் கையெழுத்து வாங்காமலேயெ பள்ளிக்கு சென்றுவிட்டேன், முதல் பீரியடில் வகுப்பு ஆசிரியையிடம் கொடுக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னோட வகுப்பு பசங்கள் எல்லோரும் காலை அசெம்பிளிக்குச் சென்றனர், நான் அப்படியே என்னோட மேசைக்கு கீழே அமர்ந்து அப்படியே அச்சுப்பிசகாமல் என்னுடைய மாமா கையெழுத்தைப் போட்டுவிட்டேன். அது டீச்சரிடமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாலை எப்போதும் என்னுடைய பெரியம்மா வீட்டிற்கு படிக்கச் செல்வேன். அவர்கள் மேனிலைப்பள்ளி ஆசிரியை. படித்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் என்னைடைய கடைசி மாமா என்னுடைய வீட்டில். எனக்கு திக்கென்று இருந்தது. என்னுடைய அம்மா அவரிடம் நான் வந்து கையெழுத்து வாங்கினேனா என்று விசாரிக்க அவர் இல்லையென்று சொல்ல, என்னைத் தேடி மாலை வீட்டிற்கு வந்துவிட்டார், நான் கையெழுத்துப் போட்ட விஷயம் யாருக்கும் தெரியாது. அவர் என்னைப் பார்த்தவுடன் என்னுடைய ரிப்போர்ட் கார்டைக் கேட்க, நான் திரு திருவென்று முழிக்க, அவரிடன் பின் நான் கையெழுத்துப் போட்டதைச் சொல்ல, எனக்கு செம அடி, என்னால் இன்னும் அந்த நாளை மறக்க முடியவில்லை, உங்களுக்கு விசிறி மட்டை தெரியுமா? பனையோலை வைத்து செய்யப்படுவது, அதைகொண்டு எனக்கு அடிவிழுந்தது. பயங்கர அடி, என்னுடைய கையில், காலில் என எங்கும். நான் கத்த அவர் அடிக்க, நான் அழுக அவர் அடிக்க என சிறிது நேரத்திற்கு சென்றது.

கொஞ்ச நேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு நான் எப்படி கையெழுத்துப் போட்டேன் என்றுக் கேட்டார், அதற்கு நான் அவருடையக் கையெழுத்தை அச்சுப்பிசகாமல் அவரிடமே போட்டுக் காண்பிக்க(பயங்கர ஞாபகசக்தி) அவர் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்...

4 comments:

Annamalayaar said...

Dear Brother Charles:

Hope this message finds you in the pink of health. It seems that in this blog you have written down the events that you still cherish in your mind, haven't you? I enjoyed reading this post.

I have been having very high regards for you. Do you know why? Because it is only who introduced to me the website, www.higopi.com/Tamil/ucedit and by virtue of it I am able to send emails and even post things in our mother tongue Tamizh in my blogspot.

Thanks for your comments on my translated version of "After Twenty Years". One advice which I would like to offer you is that kindly avoid using English words while writing something in our mother tongue. Our mother tongue which has got elevated to the rank of "Classical Language" will then lose its identity.

I wish to quote an example. In this post, you have written "Period" in Tamizh. Instead you could have written "Paada Velai". Let me go through all the posts in your blog and get back to you soon. I also wish that you keep writing incessantly.

Are you a Chemistry graduate? I am also a post graduate in Chemistry. I also possess profound interest in Tamil Eelam. I keep praying to God that very soon our Eelam Tamizh brothers and sisters should start living in peace and harmony by His Divine Grace. I also wish to serve Eezham refugees. But till this very moment I haven't. I wish to extent either monetary or physical assistance to them. So, if you have some contacts of theirs, then kindly let me know.

Hats off to you Charles!

Divya said...

செம அடி வாங்கியிருக்கிறீங்க போலிருக்கு??

அதுவும் விசிறி மட்டையினால் வாங்கின அடின்னு நல்லா ஞாபகம் வைச்சிருக்கிறீங்க!

\\கொஞ்ச நேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு நான் எப்படி கையெழுத்துப் போட்டேன் என்றுக் கேட்டார், அதற்கு நான் அவருடையக் கையெழுத்தை அச்சுப்பிசகாமல் அவரிடமே போட்டுக் காண்பிக்க(பயங்கர ஞாபகசக்தி) அவர் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்...\

ரசித்து சிரித்தேன் இவ்வரிகளை படிக்கும் போது!

Shan Nalliah / GANDHIYIST said...

Great! please write more true stories! Thanks to annamalaiyaar too for his kind words to TE people!

Joe said...

சுவாரஸ்யமான இடுகை.

குழந்தைகளை அடிப்பது தவறு என்றும், அதனால் அவர்களுடைய கற்பனை / சிந்தனைத் திறன் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.